அமைச்சர்களை முற்றுகையிட தினகரன் காரணமா..?

பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கியத்தலைவராக விளங்கிய மூக்கையாத்தேவர் பிறந்த தினத்தை அக்கட்சியினர் இன்று கொண்டாடினர். உசிலம்பட்டியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய சமாதியில் பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர். தினகரன் அணி சார்பில் மதுரை மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் அஞ்சலி செலுத்தினார்கள். 

மூக்கையாதேவர்

அதற்குப்பின் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல்சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், பாஸ்கரன் ஆகியோர் வந்தனர். மரியாதை செலுத்திவிட்டு திரும்பிச் செல்லும்போது சீர்மரபினர் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டனர். ''பிரமலைக்கள்ளர் சமுதாயத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்டகாலமாகப் போராடி வருகிறோம், எங்கள் கோரிக்கையைக் கண்டு கொள்ளாதது  ஏன்'' என்று அமைச்சர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது, ''இதை அரசிடம் கூறிப் பரிசீலிக்கிறோம்'' என்று அமைச்சர்கள் சொல்ல, அவர்கள்  ஒத்துக்கொள்ளவில்லை, பிறகு  கட்சியினரும், காவல்துறையினரும் முற்றுகையிட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு அமைச்சர்களை அனுப்பி வைத்தனர். சீர் மரபினர் நலச்சங்கத்தினர் மூலம் அமைச்சர்களை முற்றுகையிட வைத்ததன் பின்னணியில் டிடிவி.தினகரன் தரப்பினர் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!