வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (06/09/2017)

கடைசி தொடர்பு:19:39 (06/09/2017)

நில அபகரிப்பு வழக்கில் பொன்முடியின் விடுதலை செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொன்முடி

1998-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது சைதாப்பேட்டைப் பகுதியில் 3,600 சதுர அடி அளவு கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து தனது மாமியார் பெயரில் பதிவு செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதை எதிர்த்து அரசு தரப்பில் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடியை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.

ஆனால், முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கும் நில அபகரிப்பு வழக்கும் ஒன்று கிடையாது என்றும், இந்த வழக்கில் பொன்முடியை விடுதலை செய்து அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என்றும் தெரிவித்தது. மேலும் அந்த நில அபகரிப்பு வழக்கை பொன்முடி எதிர்கொள்ள வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பால் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க