Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கீழடி அகழாய்வு இடத்தை மூடக் கூடாது’ - நீதிமன்றம் கருத்து

கீழடி அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தை மூடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்துள்ளது. 

கீழடி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2,000 ஆண்டுகள் பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அந்தப் பகுதியிலேயே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கனிமொழி மதி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மேலும், கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் பழங்கால பொருள்கள் புதைந்துள்ளன. ஆனால், ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அந்தப் பகுதியில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கனிமொழி மதி தரப்பில், ‘கீழடியில் அகழாய்வு நடைபெற்று வரும் இடம் மழையால் நிரம்பியுள்ளது. அகழாய்வு நடைபெறும் இடத்துக்குள் தண்ணீர் புகாதவாறு பாதுகாக்க வேண்டும். மேலும், முந்தைய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்களையும் மழையிலிருந்து பாதுகாக்கப் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அகழாய்வு மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிம காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க பக்கத்திலுள்ள சமுதாயக்கூடத்தை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தொல்லியல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.  
 

கீழடி

 

இரு தரப்பு கருத்துகளைக் குறித்துக்கொண்ட நீதிபதிகள், அகழாய்வுப் பகுதிக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், பழங்கால பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க சமூகநலக் கூடத்தை வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க அரசு வழங்கியுள்ள இடத்தைக் கூடுதல் அட்வகேட் ஜெனரல், மத்திய அரசு வழக்கறிஞர் ஆகியோர் பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக் கூடாது. அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பதுதான் சிறப்பு. ஹரப்பா, மொகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல்தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களைத் தனியாருக்கு இழப்பீடு வழங்கி அவற்றைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close