Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி கடலில் தூர்வாரும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்!

புதுச்சேரி மீன் பிடித் துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணியைச் சரிவர செய்யாத அரசைக் கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி தூர்வாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. தூர்வாரும் பணிக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசின் நிறுவனத்துக்கு அளித்தார் கிரண்பேடி. அதற்காக சுமார் 7 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற அந்தப் பணி முடிந்த நிலையில், மீண்டும் மண் மூடி முகத்துவாரம் தூர்ந்து போனது. அதனால் கடலுக்குச் செல்லும் படகுகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தது. இந்நிலையில், தற்போது முற்றிலுமாக கடலுக்குப் படகுகளைச் செலுத்த முடியாமல் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருப்பதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 100-க்கும் மேலான பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் கடல் முகத்துவாரத்தில் இறங்கி மனிதச் சங்கிலி அமைத்து மண்ணை அள்ளித் தூர்வாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளுநர் கிரண்பேடி மற்றும் மாநில அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close