Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்: ஜாக்டோ ஜியோ அமைப்பு உறுதி!

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் முன்பே அறிவித்திருந்தது போல போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியனிடம் பேசும்போது...

"சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் இயக்கங்களும் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பின் மூலம் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம். முதல் கட்டமாக கடந்த மாதம் 18-ம் தேதி மாவட்ட தலைநகர்களில் ஆரப்பாட்டம் நடத்தினோம், அதன்பின் கடந்த 5-ம் தேதி காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு கூடி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தோம்.

அதன்பின்பும் அரசு மௌனம் காத்ததால் ஆகஸ்டு 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ததுடன் வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்படி இருந்தும் பழைய நிலையே தொடர்ந்ததால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் சாலை மறியலிலும் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ அறை கூவல் விடுத்தது. கடந்த 4-ம் தேதி மூத்த அமைச்சர்கள் குழு எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். அதனடிப்படையில் 6.9.2017 அன்று ஈரோட்டில் தமிழக முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, திட்டமிட்டபடி 7.9.2017 ஆன இன்று வேலைநிறுத்தம் நடைபெறும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ சார்பாக காலை 10 மணிக்கு மறியல் நடைபெறும். இந்த மறியலில் மாநில அளவில் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பங்கேற்பார்கள்'' என அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement