Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கலாம்: தமிழக வனத்துறை

தமிழகத்தில் வனங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடம் பெயர்ந்தும் உணவுக்காகவும் ஊருக்குள் வரும் காட்டு விலங்குகளால் பயிர்களுக்கு மட்டுமல்ல, உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வனத்துறை

மதுரை மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி, சோழவந்தான் வனச்சரகத்தில், வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள், தோட்டங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கிராம மக்களையும் விலங்குகள் தாக்குகின்றன. இப்படி பாதிப்புக்குள்ளாவோர் யாரிடம் முறையிடுவது, இழப்பீடு எப்படி கோருவது என்பது தெரியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருந்தார்கள். அப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற வனத்துறை அலுலவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. 'வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டால், மூன்று நாள்களுக்குள் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பயிர் சேதமான புகைப்படம், குடும்ப அட்டை, பட்டா நகல், வருவாய்த்துறையினர், வனத்துறை அதிகாரி, வேளாண்துறை அலுவலரின் பரிந்துரைக் கடிதம் போன்றவைகளை இணைத்து, சேத மதிப்பைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்,  இதேபோல் விலங்குகளால் தாக்கப்பட்டு உடல் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டிருந்தால் அவரது உறவினர்கள், அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்' என்று மதுரை மாவட்ட வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் மதுரையில் நடந்த வனத்துறை மண்டல ஆய்வுக்கூட்டத்தில், பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை விரைந்து கொடுக்கவேண்டுமென்று அமைச்சர்  சீனிவாசன் வன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close