Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அனிதா மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம்' - சுப.உதயகுமார் 

மாணவி அனிதா போன்ற உயிரிழப்புகள்  தொடராமல் இருக்க நீட் தேர்வை தமிழகத்தில் தடை செய்ய மத்திய, மாநில அரசை வலியுறுத்தி குமரி மக்கள் அமைப்பு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அணு உலைகள் எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் சுப.உதயகுமார் பேசும்போது, 'நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்றன. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் நுழைவுத் தேர்வு முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இளைஞர்கள்.

அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை தமிழகத்தில் தடை செய்ய கேட்டும் இதுபோன்ற உயிர்ப் பலிகள் தொடராமல் இருக்க வேண்டும். சமத்துவமும், சமூக நீதியும், சம வாய்ப்பும் அனைத்துத் தரப்பு இளைஞர்களுக்கும் வழங்க வேண்டும். நீட் தேர்வு ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டுமே உயர்த்தும் மற்றவர்களை தலைமுறை தலைமுறையாக தண்டிக்கப்பட்டு கிடக்க வழிவகுக்கிறது. ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் மட்டுமே உயர் கல்விக்கு வரவைக்க மத்திய அரசு முயல்கிறது. பத்து, மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி அனிதாவுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அறிக்கைகள் கொடுத்து மத்திய, மாநில அரசுகள் கொலை செய்துவிட்டது. மத்திய அரசை பின்னிருந்து இயக்கும் கும்பல்தான் பெங்களூரில் பத்திரிகையாளர் கௌரியை கொலைசெய்துள்ளது' என்று  தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement