Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடிப்படை வசதிகளை செய்யவில்லை எனில் அடிப்படை ஆவணங்களை ஒப்படைத்து விடுவோம் - திருப்பூர் மக்கள் அரசுக்கு எச்சரிக்கை!

தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து தருமாறு மாநகராட்சி நிர்வாகத்தை எச்சரித்திருக்கிறார்கள் திருப்பூர் மாநகர மக்கள்.


திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட ரோஜாநகர் பகுதியில் மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சரியான சாலை வசதி, சாக்கடை வசதி என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இப்பகுதியில் சீரமைக்கப்படாமல் இருப்பதால், மிகவும் சிரமத்துக்கு ஆளாகிப்போயிருக்கிறார்கள் இங்கு வசிக்கும் மக்கள். சாக்கடை வசதி இப்பகுதியின் பெரும் பிரச்னையாக இருப்பதால், வீட்டுக்கு அருகிலேயே குழிகளை தோண்டி, கழிவுநீரை தேக்கி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் இப்பகுதிவாசிகள். இதன்மூலம் சுகாதாரக்கேடும் அதிகளவு ஏற்பட்டு, அப்பகுதி குழந்தைகள் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் தொடர்ந்து பாதிக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இப்பகுதியில் எந்தவித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படாமலேயே இருக்கிறது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், தங்கள் பகுதியின் அடிப்படை பிரச்னைகள் குறித்து, " தகவல் அறியும் உரிமை சட்டத்தின்" மூலம் சில தகவல்களை அரசிடமிருந்து பெற்றபோதுதான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்கள். அதாவது அடிப்படை வசதிகளே இன்றளவும் முழுமையாக இல்லாமல் இருக்கும் சம்பந்தப்பட்ட அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு 78 லட்சம் ருபாய்வரை அரசுக்கு செலவாகி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். இந்த தகவலால் கொதித்துப்போன அப்பகுதி மக்கள், இனியும் எங்கள் பகுதியை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்துக்கொண்டே இருந்தால், அரசு நிர்வாகம் எங்களுக்கு வழங்கியிருக்கும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் அனைத்தையும் கூடிய விரைவில் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close