Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்விலிருந்து  தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம்

ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் மத்திய அரசும் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநிலங்களின் சூழலைக் கருதி மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சுய லாபத்துக்காக தொடர்ந்து ஜனநாயகப் படுகொலைகளைச் செய்துவருவதாக நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தீபா பேரவையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட  நீட் தேர்வில் இருந்து  தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி குமரி மாவட்டம்  நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அம்மா ஜெ தீபா பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் மத்திய  அரசும் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநிலங்களின் சூழலைக் கருதி மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சுய லாபத்துக்காக தொடர்ந்து ஜனநாயகப் படுகொலைகளைச் செய்து வருகின்றன. அனிதா மரணத்துக்கு போர்க்கொடி தூக்கும் தி.மு.க-வும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க. நினைத்திருந்தால் அனிதாவுக்கு மருத்துவப் படிப்பு படிக்க உதவி செய்திருக்க முடியாதா?. தி.மு.க-வின் எத்தனையோ முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ-க்களின் குழந்தைகள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close