Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் போராட்டக் களத்தில் சசிகலா குடும்பத்துப் பெண்!

'நீட்' தேர்வுக்குக் காரணமான ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சசிகலா குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, மகளிரைக் குறிவைத்து, தனது போராட்டத் திட்டத்தை இப்போது மேற்கொண்டுவருகிறார். அவர், கிருஷ்ணபிரியா. அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள்தான் இந்த கிருஷ்ணபிரியா. சில ஆண்டுகளாக, கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இந்தத் தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளுக்கு உதவிகள், இயற்கைச் சீற்றத்தின்போது பொதுமக்களுக்கு உதவிகள் செய்துவருகிறார். போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எதிலும் தலைக்காட்டாமல் இருந்து வந்த கிருஷ்ணபிரியா, இப்போது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், 'அனிதாவின் மரணம் தமிழக மக்களாகிய நம் அனைவரையும் ஆழமான துயரில் ஆழ்த்தியிருக்கிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. எதிர்காலத்தில் இம்மாதிரி துயரச் சம்பவங்கள் தொடராது தடுக்கும் கடமையும் கண்ணுக்குத் தெரியாத லட்சோப லட்சம் அனிதாக்களைக் காப்பாற்றும் கடமையும் பொறுப்பும் சாமானிய மக்களாகிய நம் ஒவ்வொருவக்கும் உள்ளது.

பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் வேறுபாடு, பாடத்திட்டத்தில் வேறுபாடு, கல்வித் தரத்தில் வேறுபாடு, வசதி படைத்திட்டோருக்கு ஒரு கல்வி முறை, ஏழை எளிய மக்களுக்கு மற்றொரு கல்வி முறை என கல்வியில் எத்தனையோ வேறுபாடுகள் தமிழகத்தில் நிலவும்போது, இந்தியா முழுக்க ஒரே தேர்வு என்பது ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா?' என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்  'நீட் எதிர்ப்பு அறவழிப் போராட்டம்' 10-9-16 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளதாகவும், கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன், மக்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சசிகலா குடும்பத்தினர், ஆளும் தரப்புக்கு எதிராக காய்நகர்த்தி வரும் நிலையில், கிருஷ்ணபிரியாவின் போராட்ட அறிவிப்பையும் எடப்பாடி தரப்பு உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close