Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சட்ட நகலையே கொளுத்துவோம்” - அழைப்பு விடுக்கும் திருமா!

நீ்ட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வேகமெடுத்துவருகின்றன. பல இடங்களில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, வரும் 8-ம் தேதி அன்று நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடத்த உள்ளது. 

திருமாவளவன்

இந்நிலையில், மாணவி அனிதா தற்கொலைக்குக் காரணமாக அமைந்த நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், நீட் தேர்வு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில், அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘நீட்’ ரத்தாகும் அல்லது ஒராண்டுக்கு மட்டுமாவது விலக்கு கிடைக்கும் என்கிற போலியான நம்பிக்கையைத் தமிழக அரசு மாணவர்களிடையே வளர்த்து விட்டது. அதற்கு மத்திய அரசும் இணங்குவதுபோல நாடகமாடியது. கடைசியில், தமிழக மாணவர்களை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டன. எனவே, தமிழகத்துக்குத் துரோகமிழைத்த அரசுகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நீட் சட்ட நகல் எரிப்புப் பேராட்டம் நடைபெறுகிறது. 

அனிதாவின் குடும்பத்துக்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் ரூ.7 லட்சத்தை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது வன்கொடுமைகள் நிகழ்கிறபோது மத்திய அரசின் சார்பில் சட்டப்படி வழங்கப்படும் இழப்பீடாகும். இதைத்தான் முதல்வர் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. தமிழக அரசின் சார்பில் அந்தக் குடும்பத்துக்கு நிதி வழங்க வேண்டும் என்கிற இரக்கம் தமிழக முதல்வர் அவர்களிடம் இல்லையென்பது வேதனைக்குரியது. இந்த நிதி ஏழு லட்சத்தையும் வேண்டாம் என்று அனிதா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அரசு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும், அதைப் பெரிதாகக் கருதாமல், அனிதா குடும்பத்தினர் ‘நீட் தேர்வை நடைமுறைப்படுத்தவே கூடாது; முழுமையாக அதை ரத்துசெய்ய வேண்டும்’; என்று வலியுறுத்துவது வரவேற்கக்கூடியதாகும். 

இந்நிலையில், நீட் தேர்வை இனி எக்காலத்திலும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நீட் சட்ட நகல் எரிப்புப் பேராட்டத்தில் பங்கேற்கிறார்கள்” என்று அறிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close