Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உரிமைக் குழு நோட்டீஸுக்கு எதிரான வழக்கு..! இன்று விசாரணை

சட்டமன்ற உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. 


குட்கா மற்றும் போதைப் பொருள்களை தமிழகத்தில் விற்பதற்கு அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் தாராளமாக கிடைப்பதாக, மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதை நிரூபிக்கும்விதமாக, சட்டப்பேரவைக்குள் புகையிலைப் பொருள்களையும் எடுத்துச்சென்றார். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு சட்டப் பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்குமாறு, சமீபத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு உரிமைக்குழு உத்தரவிட்டது. விளக்கமளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தி.மு.க உறுப்பினர்கள் மேலும் 15 நாள்கள் அவகாசம் கேட்டிருந்தனர். இந்நிலையில், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement