கௌரி லங்கேஷ் மரணத்துக்கு கமல்ஹாசன் இரங்கல்

தீவிர இந்துத்துவா விமர்சகர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


தீவிர இந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்துவந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். 'லங்கேஷ் பத்திரிகே' என்ற கன்னடப் பத்திரிகையை நடத்திவந்த கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவந்தவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜேஷ்வரி நகரில் உள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக  ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், ''துப்பாக்கியைக்கொண்டு ஒருவருடைய குரல்வளையை நெறிப்பது மோசமான ஒன்று. கௌரி லங்கேஷ் இறப்பால் வேதனைப்படும் அனைவருக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!