வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (07/09/2017)

கடைசி தொடர்பு:10:12 (07/09/2017)

அசல் ஓட்டுநர் உரிமத்துக்குப் பதிலாக டிஜிலாக்கரை ஏற்க முடியாது..! காவல்துறை அதிரடி

'அசல் ஓட்டுநர் உரிமத்துக்குப் பதிலாக, மின்னணு பெட்டகத்தின் (Digilocker) மூலம் மின்னணு அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியாது' என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 6-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் காவல்துறையினரின் இந்த உத்தரவு, வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'மின்னணு பெட்டகத்தை'(Digilocker) ப் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி நிலவிவருகிறது.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், 'அசல் ஓட்டுநர் உரிமத்துக்குப் பதிலாக டிஜி லாக்கரை ஏற்றுக்கொள்ள முடியாது. டிஜி லாக்கர் நமது அசல் உரிமங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டது. 'டிஜிலாக்கர்' மூலம் காட்டப்படும் ஆவணங்களை பரிசோதிப்பதற்கான கருவிகள் காவல்துறையிடம் இல்லை. மோட்டார் வாகன சட்டத்தில், 'டிஜிலாக்கரில்' ஆவணங்களைக் காட்டுவதற்கான வழிமுறைகள் இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.