Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இனி அனைத்து இடங்களிலும் போராட்டம் வெடிக்கும்!' - நாம் தமிழர் எச்சரிக்கை

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த  அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது, அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், கட்சிகள் சார்பாக போராட்டங்கள்  நடைபெற்றுவருகின்றன

anitha neet

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில், நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ச்செல்வன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழ்ச்செல்வன், ‘மருத்துவம் படித்து ஏழை மக்களுக்கு உதவி செய்வதே எனது கனவு' என்று அனிதா கூறியதைக் கடைசியில் வெறும் கனவாகவே மாற்றியது நீட் தேர்வு.

நீட் என்றால், தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு. ஆனால், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்துக்கான நுழைவுத்தேர்வை எழுதச் சொன்னால், அந்த மாணவர்கள் எப்படி எழுதுவார்கள். அம்மா ஜெயலலிதா வழியில் செல்லும் இந்த ஆட்சி, அனிதா குடும்பத்தினருக்கு ரூபாய் 7 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர்  பழனிசாமி  அறிவித்தார். ஆனால், ஜெயலலிதாவே எதிர்த்து மறுத்த நீட் தேர்வை,  இப்போது உள்ள அரசு எதிர்க்காதது எப்படி ஜெயலலிதா வழியில் செல்லும் ஆட்சியாகும்? 

இந்திய சட்டம் 371-ன் படி, தனது மாநில மக்கள் தவிர வேறு எந்த மாநிலத்து மாணவர்களும் தங்கள் மாநிலத்தில் படிக்க முடியாது என்ற சட்டத்தை, நமது அண்டை மாநிலமான ஆந்திரா நிறைவேற்றும்போது, அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏன்?

அடுத்த நாட்டுக் குடியரசுத்தலைவரின்  பிறந்தநாளுக்கு ட்வீட் செய்யும் பிரதமர் மோடி, தமிழக மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு ஒரு ட்வீட் செய்ய நேரமில்லை. நடிகர்-நடிகைகள், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க நேரமுள்ள பிரதமருக்கு, நமது தமிழ்நாட்டு விவசாயிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை. 

இந்த மண்ணில், போராடினால்தான் எதையும் பெற முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு மக்களை மத்திய அரசும் மாநில அரசும் மாற்றிவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டி, இனி அனைத்து இடங்களிலும் போராட்டம் வெடிக்கும்’ என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close