Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌரி லங்கேஷை நக்ஸலைட்டுகள் மிரட்டியதாக சகோதரர் தகவல்!

சுட்டுக் கொல்லப்பட்ட கௌரி லங்கேஷுக்கு நக்ஸலைட்டுகளிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்ததாக அவரின் சகோதரர் இந்த்ரஜித் கூறியுள்ளார்.

கௌரி கொலை

''கௌரி லங்கேஷ் நக்ஸலைட்டுகளை மனம் மாற்றி சாதாரண வாழ்க்கையில் ஈடுபடவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். சமீபத்தில், . நக்ஸலைட் குழுவிலிருந்து இருவர் விலகி வரக் காரணமாக கௌரி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நக்ஸலைட்டுகளிடமி  ருந்து அவருக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இதுகுறித்து என்னிடமோ, சகோதரியிடமோ கூறியதில்லை. எனவே, போலீஸார் இந்தக் கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

லங்கேஷ் பத்திரிகையின் நிறுவனரான பி.லங்கேஷ் 2004-ம் ஆண்டு இறந்தார். பின்னர், கௌரி அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார். நக்ஸலைட்டுகளுடன் கௌரி தொடர்பில் இருந்தது, சகோதரர் இந்த்ரஜித்துக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கௌரிக்கும் வெளியீட்டாளராக இருந்த சகோதரர் இந்த்ரஜித்துக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  லங்கேஷ் பத்திரிகையில் இருந்து வெளியேறிய அவர், தன் பெயரில் 'கௌரி லங்கேஷ்' பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். மனதில் பட்டதை ஆணித்தரமாக எழுதுவதை வழக்கமாகக்கொண்டவர். 

கொலை நடந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், கொலையாளி ஹெல்மெட் அணிந்து வந்து துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close