Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடம் புரண்டது எக்ஸ்பிரஸ் ரயில்! உயிர் தப்பிய பயணிகள்

மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து மத்தியப்பிரதேசம் சென்ற ரயில், சான்பத்ரா என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துள்ளானது. 


உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆகஸ்ட் மாதம் இரண்டு ரயில் விபத்துகள் நடந்தன. முசாபர்நகர் அருகே, உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 23 பேர் பலியாயினர்; 156 பேர் காயமடைந்தனர். அதிலிருந்து சில தினங்களுக்குப் பின்னர், அவுரியா மாவட்டத்தில், டெல்லியிலிருந்து வந்த காஃபியாத் விரைவு ரயிலில் 10 பெட்டிகள் தடம்புரண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தொடர் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பதவி விலகுவதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். ஆனால், பிரதமர் அவரை காத்திருக்கும்படி அறிவுரை கூறியிருந்தார்.

அதன் பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன் நடத்த அமைச்சரவை மாற்றத்தில், ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபு, தொழில் மற்றும் வர்த்தகத்துறைக்கு மாற்றப்பட்டார். நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த பியூஸ் கோயல், கூடுதலாக ரயில்வே பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், இன்று மேற்குவங்கத்திலிருந்து மத்தியப்பிரதேசத்துக்குச் சென்ற விரைவு ரயில், உத்தரப்பிரதேச மாநிலம் சான்பத்ரா என்ற இடத்தில் தடம் புரண்டது. அந்த விபத்தில், ஏழு பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close