Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

7 எம்.பி, 3 எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரை சந்தித்தார் தினகரன்!

7 எம்.பி, 3 எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்துபேசியது முதல்வர் பழனிசாமி அணியினரை அதிரவைத்துள்ளது.

டிடிவி தினகரன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கடிதம் அளித்தனர். மேலும், முதலமைச்சரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் ஆளுநரைச் சந்தித்த தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து அரசுப் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக முறையிட்டனர். ஆனால், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராகக் கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-விலிருந்து விலகவில்லை. எனவே இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அதில் தலையிட முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 109 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதனால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதை அவர்களே ஒப்புக்கொண்டிருப்பதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை டி.டி.வி. தினகரன் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூவர் மற்றும் 7 எம்.பி-க்களுடன் சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் தினகரன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.  தினகரனுடன் எம்.எல்.ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், கருணாஸ் ஆகியோரும், எம்.பி-க்கள் நாகராஜன், விஜிலா சத்தியானந்த், செங்குட்டுவன், உதயகுமார், கோகுலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close