Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரன் வருகைக்காக கொடி, தோரணங்களால் அமர்க்களப்படுத்திய ஆதரவாளர்கள்!

டி.டி.வி.தினகரன் வரவேற்பு ஆர்ச்

தூத்துக்குடியில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவுக்கு வருகை தருகிறார், டி.டி.வி.தினகரன். அவரை வரவேற்று, நெல்லை மாநகரம் முழுவதும் வரவேற்பு வளைவுகளை வைத்து அசத்தியிருக்கிறார்கள், ஆதரவாளர்கள். 

அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், முதல் முறையாக தென் மாவட்டத்துக்கு வருகை தருகிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளரான முருகன் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக, இன்று மாலை நெல்லை வருகை தரும் தினகரனை நெல்லை மாவட்ட எல்லையில் வரவேற்க, கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். 

டி.டி.வி.தினகரன் பேனர்

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்த வரை, மாநகர மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக உள்ளார். அத்துடன், மாநகர மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளரான கே.ஜே.சி ஜெரால்டு, எம்.ஜி.ஆர்.இளைஞரணிச் செயலாளர் வி.கே.பி.சங்கர் உள்ளிட்ட பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகளும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களாகவே உள்ளனர். மாநில அமைப்புச் செயலாளரான ஆர்.பி.ஆதித்தன், மாநிலங்களவை உறுப்பினரும் மாநில மகளிரணிச் செயலாளருமான விஜிலா சத்யானந்த் ஆகியோர், டி.டி.வி.தினகரன் அணியில் இடம் பெற்றிருப்பதால், அவரது வருகையை உற்சாகமாக வரவேற்கத் தயாராகிவருகின்றனர்.

மதுரை வழியாக வருகைதரும் அவருக்கு, நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நெல்லை மாநகரம் மட்டுமல்லாமல், டி.டி.வி.தினகரன் செல்லக்கூடிய சாலை முழுவதும் அ.தி.மு.க-வினர் கொடிகள், தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், பேனர்கள் அமைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் காரணமாக, நெல்லை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close