Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதாவுக்காகத் திணறிய தமுக்கம்!

 

தமுக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரியும், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் வழங்கக் கோரியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் போராட்டம் தொடங்கியது. இதில், கல்லூரி மாணவ மாணவியர் மட்டுமல்லாது, பள்ளி மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று சமூக வலைதளங்களால் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர், அவர்களைக் கலைந்துசெல்ல வலியுறுத்தினர். அதை மாணவர்கள் ஏற்காததைத் தொடர்ந்து, வலுக்கட்டாயமாக அவர்களை அகற்ற முற்பட்டனர். மாணவர்கள், தமிழன்னை சிலையின் மீது  ஏறி முழக்கமிட்டனர். அவர்களைக் கீழே இறக்கிய காவல்துறையினர்,  கல்லூரி மாணவ மாணவிகள் 70 பேரை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட மாணவ மாணவிகள், அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

நீட்

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள், " நீட் தேர்வை ரத்துசெய்", "மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வழங்கு" எனத் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிவருகின்றனர். நேற்று, மதுரை தெப்பக்குளம் பகுதியில் போராட்டத்துக்காக  நோட்டீஸ் கொடுத்த மாணவர்களை போலீஸ் கடுமையாகத் தாக்கி கைதுசெய்த பிறகும், இன்று மாணவர்கள் போராட்டம் செய்ததால், போலீஸ் வட்டாரம் அவர்களின் எழுச்சியைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close