Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாலு பிரசாத்துக்கு மீண்டும் சிக்கல்..! நேரில் ஆஜராக சி.பி.ஐ சம்மன்

லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ அழைப்பானை அனுப்பியுள்ளது. 


ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத், 2004-2009-ம் ஆண்டு வரை ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான இரு ஹோட்டல்களை தனியார் நிறுவனங்கள் பராமரிப்பதற்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 'ரயில்வேக்கு சொந்தமான பி.என்.ஆர்.ராஞ்சி மற்றும் பி.என்.ஆர்.பூரி ஆகிய ஹோட்டல்களைப் பராமரிக்க சுஜாதா ஹோட்டல் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஹோட்டல் வினய் மற்றும் விஜய் கோச்சாருக்குச் சொந்தமானது. அவர்களிடமிருந்து மூன்று ஏக்கர் நிலத்தை பினாமி நிறுவனத்தின் பெயரில் லஞ்சமாக பெற்றுள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மற்றும் சர்ளா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி லல்லு பிரசாத்தும் 12-ம் தேதி அவரது மகன் தேஜஸ்வியும் ஆஜராகவேண்டும் என்று அழைப்பானை அனுப்பியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close