பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து..! மூன்று பேர் பலி

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்து அமைந்துள்ளது சோமனுர். பேரூராட்சி பகுதியான இவ்வூரில் செயல்பட்டு வரும் பேருந்துநிலையம் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை இழந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் வழக்கமாகப் பேருந்து நிலையம் இயங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென பேருந்து நிலையத்தின் கட்டடம் இடிந்து விழத் தொடங்கியது. கண் இமைக்கும் நொடிகளுக்குள் தரைமட்டமான பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியால், கட்டடத்தின் அருகில் நின்றுகொண்டு இருந்த பயணிகள் பலரும் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதையடுத்து சுற்றுவட்டாரங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். தற்போதுவரை விபத்தில் படுகாயமடைந்த 3-க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துபோயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!