Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் போர்க்கொடி: "முதல்வரை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா?"

அ.தி.மு.க. தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் நாளொரு பரபரப்பும், பொழுதொரு அதிரடியுமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து தனி அணியாகச் செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார், ஓ.பி.எஸ். துணை முதல்வராகவும், மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இதனால் கொதிப்படைந்த டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநரைச் சந்தித்து, எடப்பாடி மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்து கடிதம் அளித்தனர். இந்நிலையில், மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஏழு எம்.பி-க்களுடன் தினகரன், சென்னையில் இன்று ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர். மூன்று எம்.எல்.ஏ-க்கள் இன்று அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

தி.மு.க. சார்பிலும், இதர எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஆளுநரைச் சந்தித்து, தமிழக அரசின் மீது பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட போதிலும், ஆளுநர் எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை.
சசிகலா குடும்பத்தினரைப் பொறுத்தவரை ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று கோரிக்கையை விட, முதல்வரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவோ, இது அ.தி-மு.க உள்கட்சிப் பிரச்னை என்றும், அதில் தலையிட முடியாது என்றும் கூறிவிட்டார். ஒரு அரசியல் கட்சியின் விவகாரங்களில் தலையிடுவது என்பது வேறு; அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிடுவது என்பது வேறு என்று அரசியல்நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை ஒரு மாநிலத்தில் நிலவும்போது, அரசியல் சாசன சட்டப்படி, முதல்வர் மீதே புகார் எழுந்தால், ஆளுநர் அதில்தலையிட்டு பெரும்பான்மையை உறுதிசெய்ய உத்தரவிடுவதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. எனவே, ஆளுநர் தனது பாலு - பா.ம.கஅதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் ஸ்திரமில்லாத சூழ்நிலையை மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஆளுநரின் கடமை!

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலுவிடம் பேசினோம். "ஒரு மாநில அரசின் அரசியல் அமைப்புச் சட்டப் பிரதிநிதியாக உள்ள ஆளுநருக்கு, மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றபட்சத்தில், சட்டமன்றத்தை கூட்டி உடனடியாக பெரும்பான்மையை நிருபிக்கக் கோருவதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. தமிழகத்தில் அரசுக்கு தலைமை வகிக்கும் 'முதல்வர் மீது நம்பிக்கை இல்லை; அவருக்கான ஆதரவை நாங்கள் விலக்கிக்கொள்கிறோம்' என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்துள்ள நிலையில். முதல்வர் கூட்டியிருந்த கூட்டத்திலேயே 109 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதாகத் தெரிய வந்துள்ள சூழ்நிலையில், பெரும்பான்மையை நிருபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஒரு முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூறுவதை விடவும், இந்த அரசுக்கு தலைமை வகிக்கும் அமைச்சர் மீதே நம்பிக்கை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு. எனவே, தாமதமின்றி உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிருபிக்குமாறு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close