Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்குமா?'- முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

hariparandhaman, அரிபரந்தாமன்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நீட் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்துக்குப் புதிதல்ல. முந்தைய காலத்தில் சி.இ.டி (common entrance test), அதாவது 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் சி.இ.டி எழுத வேண்டும். இந்தத் தேர்வும் மாநில அரசு நடத்தியதுதான். அதன்பின்பு 2006-ல் தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது சி.இ.டி சட்டம் ரத்து செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெற்றால்தான் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும். காசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் என்று மக்களை நம்பவைத்து, தாயையும், சோறு போடும் மண்ணையும் விற்று கல்வியைக் கற்க வைக்கிறார்கள்" என்று கூறினார்.

அரிபரந்தாமன், hariparandhaman

இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, நீட் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம் அளித்தார். இந்தக் கருத்தரங்கில் கல்லூரித் தாளாளர் ஜான்சன் ரெக்ஸ் தனபால், கல்லூரி முதல்வர் டாக்டர்.அ.ஜோசப்துரை, கல்லூரித் துணை முதல்வர் கீதாரூபஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close