வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (07/09/2017)

கடைசி தொடர்பு:19:55 (07/09/2017)

கடலூர் காவல்துறையில் மாநிலப் பேரிடர் மீட்புப் படை!


கடலூர் மாவட்டம், அடிக்கடி வெள்ளம் போன்ற பேரிடரால் பாதிக்கப்படும் மாவட்டம். அப்போதெல்லாம், பேரிடர் மீட்புப் பணிக்காக அரக்கோணம் போன்ற பிற பகுதிகளிலிருந்துதான் மீட்புக் குழுவை வரவழைப்பது வழக்கம். அவர்கள் வரும்வரை காத்திருக்க முடியாது என்பதால் கடலூர் மாவட்டக் காவல் துறையில் தற்காப்புப் பேரிடர் மீட்புப் படை ஒன்றை உருவாக்கி அதற்கு மாநிலப் பேரிடர் மீட்புப் படை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆஷிஷ் பெங்கார மூலம் கடலூர் தேவனாம்பட்டினம் ஆற்றில் மூன்று நாள் நினைவூட்டும் பயிற்சி  முகாம் நடத்தப்பட்டது.

.

இப்பயிற்சியில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் படகில் சென்று எப்படி பத்திரமாக மீட்பது என்ற தற்காப்பு நீச்சல் பயிற்சி, அதன் உபகரணங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த பயிற்சி. இயற்கை பேரிடர்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்த மரங்களை விரைவாக அகற்றும் பயிற்சி. மின்சாரம் தடைப்பட்டுள்ள இடங்களில் தற்காலிக உயர் கோபுரம் மின் விளக்கு அமைத்து ஒளியை ஏற்படுத்தி கொடுப்பது சம்பந்தமான பயிற்சி.


  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ப்பதற்க்கு மீட்பு உபகரனங்கள் இல்லாதபோது அவ்விடத்தில் எளிதாக கிடைக்ககூடிய பொருட்களை வைத்து தற்காத்துகொள்ளும் முறை போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பயிற்ச்சியில் 43 காவலர்கள் கலந்துகொண்டனர். இது, வரும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற ஏதுவாக இருக்கும்" என்று நம்புகின்றனர் காவல்துறையினர்.