வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/09/2017)

கடைசி தொடர்பு:20:00 (07/09/2017)

யார் இந்த சபரிமாலா ?

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டமாக மாறி தமிழகமெங்கும் வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில், ’நீட்’ தேர்வுக்கு எதிராகவும் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவான கல்விமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா. அதற்குத் துறை ரீதியாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தனது அரசுப் பணியை உதறித் தள்ளியிருக்கிறார் சபரிமாலா.

சபரிமாலா

மதுரை ஆத்திகுளத்தில் பிறந்து திண்டுக்கல்லில் வளர்ந்தவர். +2-விற்குப் பிறகு ஆசிரியர் பயிற்சியை முடித்து, 2002-ல் நேரடியாக அரசுப் பணிக்கு வந்தவர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பக்கத்தில் எல்லையடி அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய இவர் 2009-ல் திண்டிவனம் வைரபுரம் பள்ளிக்கு வந்தார். சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராக, நடுவராக இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டவர். தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவுக்கு வசதிகள் இருந்தும் தன் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்.

சபரிமாலா

இடையில் சில வருடங்கள் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தன்னிடம் படிக்கும் மாணவர்களை மேடைப் பேச்சுக்குத் தயார் படுத்தியவர். தொடர்ந்து மாணவர்களையே பேச்சாளர்களாக மாற்றி தமிழகம் முழுக்க சுமார் 100 பட்டிமன்றங்களை நடத்தியவர். பள்ளிகள், திருவிழாக்கள், இலக்கிய அரங்கங்கள் என வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் மாணவர்களோடு மேடையேறிவிடுவார். அப்துல் கலாமின் கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு சேர்த்து தொடர்ந்து அவர்களோடு பயணித்து வருபவர்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க