Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோயிலின் மூலிகை ஒவியங்களைப் புனரமைக்கும் பணி! அமைச்சர் நேரில் ஆய்வு

நெல்லை மாவட்டத்தின் பழைமையான நாறும்பூ நாதசுவாமி கோயிலில் நடக்கும் மூலிகை ஓவியங்களைப் புனரமைக்கும் பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வுசெய்தார்.

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் நாறும்பூ நாதசுவாமிகள் கோயில் உள்ளது. பழைமையான இந்தக் கோயிலின் கோபுரப் பகுதியின் உட்பகுதியில் உள்ள பிராகார அறைகளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, மூலிகைகளால் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்தச் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால் அவை சிதிலமடைந்து வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. 

மூலிகை ஓவியம்

இதையடுத்து, இந்தக் கோயிலின் மூலிகை ஓவியங்களைப் புனரமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். ஆனாலும், இதற்கான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் பணிகளை விரைந்து தொடங்கி மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்குமாறு அப்பகுதி மக்களும் பக்தர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தற்போது இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’’திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூ நாதசுவாமிகள் கோயிலில் உள்ள கோபுரத்தின் உட்பகுதியில் பழைமையான ஓவியங்கள் உள்ளன. மூலிகைகளின் மூலமாக வர்ணம் தீட்டப்பட்ட இந்த ஓவியங்கள் சிதிலம் அடைவதை தவிர்க்கும் வகையில் அதன் பழைமை மாறாமல் 1.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

மூலிகை வர்ணங்களைப் பயன்படுத்தி இந்த ஓவியங்கள் மீண்டும் வரையப்பட்டு வருகின்றன. அவற்றை நேரில் சென்று பார்வையிட்டேன். அந்தப் பணிகளை விரைவாக முடிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நெல்லையின் முக்கியத்துவம் மிகுந்த நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004-ம் வருடம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர், கும்பாபிஷேகம் நடைபெறாத நிலையில் தற்போது 1.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த 6 மாத காலத்தில் அந்தப் பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close