காஷ்மீரில் மின்சாரம் பாய்ந்து மரணமடைந்த ராமநாதபுரத்து ராணுவ வீரர்

காஷ்மீரில் மின்சாரம் தாக்கி மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் உடல் விமானம் மூலம் இன்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகே தத்தங்குடியைச் சேர்ந்த இருளப்பன் என்பவரின் மகன் வாசுதேவன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரராக பணியில் சேர்ந்து, பீரங்கி தொழில்நுட்ப பிரிவில் ஜம்மு-காஷ்மீரின் உதன்பூர் ராணுவ முகாமில் பணியாற்றி வந்த வாசுதேவன், கடந்த 4-ம் தேதி முகாமில் ஒர்க் ஷாப் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது வாசுதேவன், ஜெயப்பால் ரெட்டி ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. சக வீரர்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

வாசுதேவன்

வாசுதேவன் இறந்த தகவல் தத்தங்குடியிலுள்ள குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த வட்டாரமே சோகத்தில் மூழ்கியது. இவருக்கு சரண்யா என்ற மனைவியும் நான்கு வயதில் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர். இன்று அவரது உடல் சொந்த ஊரான தத்தங்குடிக்குக் கொண்டுவரப்பட்டது. வாசுதேவனுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாக விருதுநகர் 28-வது பட்டாலியன் படைப்பிரிவு கர்னல் முத்துப்பாண்டி, திருமுருகன் ஆகியோருடன், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், கிராமப் பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!