Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் விற்பனையாளரிடம் வழிப்பறி: கத்தியால் குத்திய கொள்ளையன்..!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள ராஜீவ்காந்தி நகரில் இயங்கி வருகிறது அரசு டாஸ்மாக் மதுபானக் கடை. இந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றி வரும் ஜெயபிரசாத் மற்றும் பழனிராஜ் ஆகியோர் வழக்கமாக டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு, கடையில் விற்பனையான 5,24,000 ரூபாயை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பல்லடம் நோக்கி புறப்பட்டிருக்கிறார்கள். அச்சமயம் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை காலால் எட்டி உதைத்து, பணப்பையை வைத்திருந்த ஜெயபிரசாத்தின் தலையில் கத்தியால் குத்தியிருக்கிறார்கள்.

வலியால் அலறித் துடித்த ஜெயபிரசாத்தின் கையில் இருந்து பணப்பையை பிடுங்கிய அந்த மர்ம நபர்கள் சட்டென தங்களின் வாகனத்தை இயக்கி சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர், தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல்துறையினர், அடிபட்ட நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழிப்பறி தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close