Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ - ஜியோ போராட்டம் - திருப்பூரில் 4000 பேர் கைது

புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதனடிப்படையில் திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தில் 8 இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் குமரன் நினைவிடம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபடத் துவங்கினர். இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. காவல்துறையினர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பின் 1,040 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களின் கலந்துகொண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் இன்று கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களையும் கைதுசெய்தது காவல்துறை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close