Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோஷத்தால் ஏற்பட்ட மோதல்... அ.தி.மு.க தொண்டருக்கு மண்டை உடைப்பு!

 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அதேவேளையில் அடுத்த விமானத்தில் வரவிருந்த டி.டி.வி.தினகரனை வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இருவரது விமானம் வந்தடைவதற்கு சில நிமிட இடைவெளியே இருந்த நிலையில், முதலில் பன்னீர்செல்வத்தின் விமானம் வந்திருந்தது. ஓ.பி.எஸ், விமான நிலையத்துக்கு வெளியில் வந்ததும் அவரைப் பார்த்த தினகரன் ஆதரவாளர்கள் "ஓ.பி.எஸ் ஒழிக" என  கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓ.பி.எஸ் அணியினர், டி.டி.வி ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முடியாமல் திணறிய காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தி மோதலைக் கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்தின் காரை தினகரனின் ஆதரவாளர் மறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில், ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து, சற்று நேரத்தில் அங்கு டி.டி.வி தினகரனும் வந்துவிட, பின்னர்,  இரு தரப்பினரும் கலைந்துசென்றனர். இரு அணியினரிடையே ஏற்பட்ட இந்த மோதலால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement