Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் வாக்குறுதியால் தப்புமா பெருமாள் மலை?

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி பெருமாள் மலையில் இருக்கும் விவசாய நிலப்பகுதியில், கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன.

இந்தப் பகுதி மக்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. இந்தப் பகுதியில் குவாரி அமைந்தால், விவசாயம் பாதிக்கப்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, இந்த விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் விதமாக,  குவாரி ஏலத்தை ரத்துசெய்யக் கோரி, இந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் ஏலத்தை ரத்துசெய்வதாக உறுதி அளித்தார். ஆனால், சில அரசியல்வாதிகளின் தலையீட்டால், மீண்டும் அதே சர்வே எண்ணில் கடந்த ஜூலை 19-ம் தேதி, இந்தப் பகுதி குவாரி ஏலம் விடப்பட்டது. ஏலத்தை ரத்துசெய்வதாக வாடிப்பட்டி வட்டாச்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உறுதியளித்த பின்னரும், கல்குவாரி அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. இதையடுத்து,  மூன்று நாள்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், தமிழக முதல்வரை சந்தித்து கல் குவாரி ஏலத்தை ரத்துசெய்யக் கோரி மனு ஒன்றை அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குவாரி ஏலத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஏற்கெனவே, பலரது வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துபோன மக்கள், முதல்வரின் இந்த வாக்குறுதி உண்மையாகுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close