Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அங்கன்வாடி பணியாளர்  நியமனத்தில் முறைகேடா!? இடைக்காலத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்!

அங்கன்வாடி

தமிழகம் முழுவதும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணி நியமனம் நடைபெற்றுவருகிறது. பல மாவட்டங்களில் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுவிட்டன. மதுரை உள்ளிட்ட இடங்களில் தற்போது அதற்கான பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நியமனத்தால், மாற்றுத்திறனாளிகள், விதவைப்பெண்கள், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அதிக அளவு முன்னுரிமை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுதா, உமாதேவி, வசந்தி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், 'புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பணி நியமனம் முறையாக நடைபெறுவதாகத் தெரியவில்லை. பணி நியமனத்துக்கான அறிவிப்பிலேயே முறையான விதிகளைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஆகவே, அங்கன்வாடிப் பணியாளர், உதவியாளர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.

மதுரை

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற உள்ள அங்கன்வாடிப் பணியாளர், உதவியாளர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தும் பணி நியமனம் குறித்தும் திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close