Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"எனக்குத் தெரிந்த கலைகளை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்" - பாரம்பர்யக் கலைகளை வளர்க்கும் அருள்செல்வி

அழிவின் விளிம்பில் அருங்கலைகள் இருக்கும்போது, அதைக் கற்றுத் தேர்ந்து, மற்றவர்களுக்கும் அக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார் அருள் செல்வி. இந்தியாவின் தென் கோடியான கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் வசித்துவருகிறார். "ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். 10-ம் வகுப்பு படிக்கும்போது தோற்றுப் போயிட்டேன். அப்போ, என்னுடைய டீச்சர் அருள்மேரிதான் 200 ரூபா கட்டி என்னை களரி கிராமியக் கலை அமைப்பில் சேர்த்து விட்டாங்க. அப்போது, நான் நன்றாக கிராமியக் கலைகளில் பயிற்சி பெற்றேன். அந்தச் சமயத்தில், பாதிரியார் வில்சன் இன்னும் பல கலைகளை நான் கற்றுக்கொள்ள உறுதுணையாக இருந்தார். அதன்பின் படிப்படியாக முற்போக்குச் சிந்தனைகளுக்கு என் கலைத் திறமையை அர்ப்பணித்தேன். களரி அமைப்பு மூலமாக வெளியிட்ட கலைகள் பற்றிய தொகுப்புப் புத்தகத்தில், நான்  எட்டுப் பாடங்களை எழுதினேன். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மாணவர்களோடு இணைந்து 2004-ம் ஆண்டு முதல் கிராமியக் கலைகளைப் பரப்பத் தொடங்கினேன்.


   
   

இந்தியாவில் உள்ள எல்லா கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தின் கலைகளை வெளி மாநிலங்களுக்கும் அங்குள்ள கலைகளை தமிழகத்துக்கும் கொண்டு வர விரும்புகிறேன். குறிப்பாக, கேரளாவின் 'துடி நடனம்', ஒரிசாவின் 'சாதுரி', காம்சாலை, கும்மி, பறை, கரகாட்டம், ஹர்பா, சிர்மி, படுகா, துடி, சக்கைகுச்சி எனப் பல்வேறு பழங்குடிக் கலைகளையும் கற்றுவிட்டேன்.மொத்தமாக, சுமார் 38 கலைகள் எனக்குத் தெரியும். நான் கற்றுக்கொண்ட கலைகளை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறேன்.

மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். அதன்மூலம் பாரம்பர்யக் கலைகளை ஊடகம் மூலமாக பரப்பவும் விழிப்பு உணர்வு கொடுக்கவும் முயன்றுவருகிறேன். தலித்தியம், பெண்ணியம் என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். நான் தாலி மற்றும் வரதட்சணை மறுப்புத் திருமணம்தான் செய்துகொண்டேன். பல பள்ளிகளில் இந்தக் கலையைக் கற்றுக்கொடுக்கிறேன். இதன் மூலமாக பாரம்பர்யக் கலைகளை வளர்க்க முடியும். இதனால் எனக்கு பாராட்டும் கிடைச்சிருக்கு, கல்லெறியும் கிடைச்சிருக்கு.  இப்போ பிஹெச்.டி.படிச்சி முடிச்சிட்டேன். அதுவும் காணி இனப் பழங்குடியினரின் கலைகளைப் பற்றித்தான். என்னுடைய லட்சியம், ஒரு பேராசிரியராக, கலைக்கென தனிப் பட்டறை அமைத்து இலவசமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்" என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் அருள்செல்வி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close