Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடருமா?

புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிடக் கோரியும் எட்டாவது ஊதியக் கமிஷனை அமல்படுத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் நேற்று முதல் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் போராட்டம், சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து, அமைப்பினருக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில், சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமாக 2,041 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதாகி, மாலையில் விடுதலைசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததாக செய்தி வெளியானது. பின்னர், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள், ''மதுரை உயர் நீதிமன்ற உத்தரவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. உத்தரவு நகல் கைக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆகையால், திட்டமிட்டபடி இன்றும் 8.9.2017 மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் வீரியமாக நடைபெறும். ஆகையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகள் அனைவரும் கலந்துகொள்வார்கள்'' என்று கூறியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close