வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (08/09/2017)

கடைசி தொடர்பு:11:10 (08/09/2017)

சி.பி.ஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஆஜர்! அக். 3-ல் குற்றச்சாட்டு பதிவு

பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மீது பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்த வழக்கு, சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாநிதி மாறன் நேரில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும் என்று தெரிவித்தார்.