Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்நாடகாவுக்குப் புறப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்..!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், புதுச்சேரியிலிருந்து கர்நாடக மாநிலம் குடகு மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததில், டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், புதுச்சேரியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சுமார் 10 நாள்களுக்கும் மேலாக அவர்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்களில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு, 'விண்ட்ஃப்ளவர்' மற்றும் 'தி சன்வே மேனர்' ஆகிய விடுதிகளில் மாறி மாறி தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான ஜக்கையன், நேற்று திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். இந்நிலையில், மீதமிருக்கும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ-க்கள், கர்நாடக மாநிலம் குடகு மலைக்குப் புறப்பட்டனர். அவர்களுக்காக அங்குள்ள 'விண்ட்ஃப்ளவர்' ரிசார்ட்டில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close