Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை! மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு

'பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவில்லை எனில், ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். ஆனால், ஆளுநர் மெளனம்காத்துவருகிறார். எதிர்க் கட்சிகள் நேரில் சென்று, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கையையும் ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுடன் தினகரன் நேற்று ஆளுநரைச் சந்தித்து, முதல்வரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற தி.மு.க நிர்வாகி இல்லத் திருமணவிழாவில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க ஆட்சிக்கு வர விரும்புகிறது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுமாறு எனக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. தமிழகத்தில் தற்போது மைனாரிட்டி ஆட்சி நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் விவகாரம்குறித்து குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரிடம் நேரில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி, ஆளுநரைச் சந்தித்து ஆட்சியைக் கலைக்கச் சொல்வோம். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவில்லை எனில், ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி மாற்றம் விரைவில் அல்ல நொடிப்பொழுதில் வர வாய்ப்பு உள்ளது" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ''இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவமனை உள்ள மாநிலம், தமிழகம்தான். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது'' என்று குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close