Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நீட்’ எதிர்ப்புப் போராட்டத்தை வீட்டில் தொடங்கினார் சபரிமாலா!

‘நீட்’ தேர்வுக்கு எதிராகத் தனது அரசுப் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா, திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை, ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டமாக மாறி தமிழகமெங்கும் வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில், ’நீட்’ தேர்வுக்கு எதிராகவும் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவான கல்விமுறை வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கடந்த 6-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா. தான் பணிபுரிந்த பள்ளியின் முன் தனது மகனுடன் போராட்டத்தில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியது காவல்துறை. மேலும், துறைரீதியாகவும் அவருக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, நேற்று (08.09.2017) அதிரடியாகத் தனது அரசுப் பணியை ராஜினாமாசெய்தார்.

சபரிமாலா

தொடர்ந்து, தனது வீட்டின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று, திண்டிவனம் ஜக்கம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் ‘இந்தியா முழுவதும் ஒரே கல்வி’ என்பதை வலியுறுத்தி, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய சபரிமாலா, “அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முயன்றேன். ஆனால், நான் அரசு ஊழியர் என்பதைக் காரணம் காட்டி, அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், என் பணியை நான் ராஜினாமா செய்தேன். மாணவி அனிதாவின் மரணம், இன்றைய சூழலைப் பிரதிபலிக்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல, கல்வி அவளைத் தேடிச் சென்றிருந்தாள் அவள் இறந்திருக்க மாட்டாள்” என்று கூறினார்.

சபரி மாலாவின் வீட்டுக்குச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அவரது போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close