Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

மருத்துவக் கல்வி

தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க மத்திய அரசு அவசரச் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என, மாணவர்கள் போராடிவருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். கூடுதலாகக் கட்டணம் வசூல்செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க மத்திய அரசு அவசரச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். தனியார் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள், நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.  முதுநிலை மருத்துவக் கல்வியிலும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட, இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

இந்தாண்டு, தமிழகத்துக்கு கூடுதலாக 2,600 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை,முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்கிட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close