Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மு.க.ஸ்டாலினுக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

அனிதாவின் தற்கொலைக்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

புதிய தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டான பகுதியில் புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜாலிங்கம் தலைமையில புதியதமிழகம் கட்சியினர், மாணவி அனிதாவை தற்கொலை செய்யத் தூண்டியது மு.க.ஸ்டாலின்தான் என்று முழக்கமிட்டவாறு, அவர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர். அதன்பின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உருவபொம்மையை எரிக்க முயன்ற புதிய தமிழகம் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி உருவ பொம்மைகளை எரித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் ராஜபாளையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement