Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு காய்ச்சலுக்கு மாணவி- காவலர்  பலி ! மருத்துவமனையில் அதிகரிக்கும் கூட்டம்

சென்னை ஆயுதப்படைக் காவலர்  ஒருவர் நேற்றும், இரண்டாம் வகுப்புமாணவி ஒருவர் நேற்று முன் தினமும் 'டெங்கு' காய்ச்சலில் உயிரிழந்துள்ளனர்.  தமிழக அரசின் வார்த்தையான 'வருமுன் காப்போம்' என்ற சொல் 'வந்தபின் காப்போம்' என்றானதால் 'டெங்கு' வின் வேகம் கட்டுக்குள் அடங்காமல் எகிறியிருக்கிறது. சென்னை, புறநகர் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புக்கு ஏராளமானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அரசுத் தலைமை மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி  பொதுமருத்துவ மனைகள்,  அரசு தண்டையார்பேட்டை  தொற்றுநோய் மருத்துவமனை போன்ற இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக அதிகளவில் கூட்டம் வருகிறது.  டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வீடுதோறும் துண்டறிக்கை கொடுத்தும், ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைத்து அறிவித்தும் சுகாதாரத் துறையினர் பணியாற்றி வருகின்றனர். போலீஸாருக்கும் டெங்கு தடுப்புக்கான நிலவேம்பு கசாயத்தை போலீஸாருக்கு வழங்கி வந்தனர்.

டெங்கு வளர்க்கும் பணி


அரசின் அறிவிப்பாக, "தேங்காய் மூடி, டயா், மற்றும் உபயோகம் இல்லாத பாத்திரங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும், சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சலுடன் சேர்ந்த தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, உடல்சோர்வு, கருப்பு நிறத்தில் மலம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுவது நல்லது" போன்ற அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஈரோடு மாணவன் தருண்நிதி, சிவகிரி மாணவி நந்தினி, கல்லுாரி மாணவி ஹேமா, திருவள்ளூர் மாணவி ஆலிஷ் எத்தில்டா, சென்னை ஆயுதப்படை காவலர் பாலாஜி ஆகியோர் டெங்குக் காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் புட்லூர் புஷ்பம், மணவாளநகர்  லட்சுமணன், பரிமளா, பேரந்தூர்  நவீன், கோவிந்தம்மாள், ஊத்துக்கோட்டை கிருஷ்ணவேணி, சிவக்குமார்,  பள்ளிப்பட்டு சாந்தி, புதுமாவிலங்கை சஞ்சனா, செங்கரையை பிரதாப், திருவொற்றியூர் பொன்னுரங்கம் உள்ளிட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சிலநாள்களாக மாலைவேளைகளில் பொழியும் மழை, பள்ளமான பகுதிகளில் அப்படியே தேங்கி  நோய்க் கிருமிகளை ஆரோக்கியமாக வளர்த்து வருகிறது. குண்டும், குழியுமான சாலைகளும் இதற்கு ஒரு காரணம்.ஆயிரம் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும் அது, டெங்குக் காய்ச்சல் வந்தபின் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக மட்டுமே இருக்கிறது. அடிப்படை பிரச்னையான சாக்கடை அடைப்பு, குடிநீரில் கழிவுநீர்க் கலப்பு போன்றவற்றுக்குத் தீர்வு காணாதவரை டெங்கு போன்ற காய்ச்சல்களின் பிடியிலிருந்து மனிதர்கள் தப்ப முடியாது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close