Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருந்தில்லா மருத்துவத்தின் மகிமை பிசியோதெரபி!

 


உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி உலக பிசியோதெரபி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,  அந்த தினத்தை கொண்டாடும் வகையில் பிசியோதெரபி மருத்துவத்தின் முக்கியத்துவம், அவற்றை பற்றிய விழிப்புஉணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் சேலம் மண்டல பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக மாபெரும் விழிப்புஉணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியில், 500-க்கும் மேற்பட்ட பிசியோதெரபி மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகளும், பிசியோதெரபி மருத்துவர்களும் கலந்து கொண்டு பிசியோதெரபி மருத்துவத்தின் மகத்துவத்தைப் பறைசாட்டும் வகையில் பேனர்கள் மற்றும் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு சேலம் நாட்டாண்மை கழக கட்டடத்தில் தொடங்கி திருவள்ளுவர் சிலை வரை சென்றடைந்து பிசியோதெரபி மருத்துவ உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள்.

இப்பேரணியில் கலந்துகொண்ட பிசியோதெரபி மருத்துவரின் மாநில சங்கத் தலைவர் டாக்டர் செந்தில்குமார், ''மருந்து இல்லா மருத்துவம், அறுவைசிகிச்சை இல்லா மருத்துவம், பக்க விளைவு இல்லா மருத்துவம், எளிய முறை மருத்துவம் பிசியோதெரப்பி மருத்துவம் ஆகும். அந்த மருத்துவத்தை பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று உலக பிசியோதெரபி தினத்தில் இந்தப் பேரணியை மேற்கொண்டிருக்கிறோம்.

கடந்த நான்கு வருடமாக உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு ''ஆரோக்கியத்திற்கான உடல் அசைவுகள்'' பற்றி  பொதுமக்களிடையே ஆரோக்யமாக வாழ்வதற்கு ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய உடல் அசைவுகள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வந்தோம். இந்த வருடம் ''வாழ்வு முழுவதிற்குமான உடல் அசைவுகள்'' பற்றி பொதுமக்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.

மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களாலும், சுற்றுச் சூழ்நிலைகளினாலும் மக்களிடையே பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. அவை தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் ஆகும். அதிலும் குறிப்பாக தொற்றா நோயான கேன்சர் ஓர் உயிர்க் கொல்லி நோயாகவே மாறி விட்டது. வயதானவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் கேன்சர் என்ற கொடிய அரக்கனின் கைகளில் சிக்குண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை இழந்து வருகின்றனர்.

இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் 39.6 சதவிகிதம் மக்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14.5 லட்சம் நபர்கள் கேன்சரினால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் 7 லட்சம் புதிய கேன்சர் நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியே. இந்தக் கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, தடுப்பு முறை சிகிச்சையாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள சிகிச்சை முறைதான் பிசியோதெரபி மருத்துவம்.

உடற்பயிற்சிகள் மூலம் இவ்வகையான தொற்றா நோய்கள் வருவதை முற்றிலும் தவிர்க்க முடியும். என்கிறது மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள். மூட்டுவலி, முதுகுதண்டு வட பிரச்னைகளால் ஏற்படும் வலிகளைத் தடுக்க அறுவை சிகிச்சைகள் தேவையில்லை. பிசியோதெரபி மருத்துவத்தால் குணப்படுத்த முடிவதோடு பக்க விளைவுகள் இல்லாததும்,  வரும் முன் காக்கும் சிகிச்சையாகவும் பிசியோதெரபி இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close