Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தன் கண்ணைத் தானம் வழங்கிய சேலம் வாசுதேவன்!

சேலத்தை சேர்ந்த ஒரு இளைஞர்  திடீரென நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிளெக்ஸ் பேனர் போடுவதற்காக அவருடைய போட்டோவை பெட்டியில் துலாவிய போது  20 ரூபாய் பத்திரம் ஒன்று இருந்தது. அந்த பத்திரத்தில் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார். அந்த வாக்கு மூலத்தை படித்த போது அனைவரும் கண் கலங்கியதோடு வாசுதேவனை நினைத்து நெகிழ்ச்சி அடைந்தார்கள்

அந்த வாக்குமூலத்தில், ''நான் இறந்து விட்டால் என்னுடைய ஒரு கண்ணை கர்நாடக மாநிலத்திற்கும், இன்னொரு கண்ணை தமிழ்நாட்டிற்கும், உடல் உறுப்புகளை மற்ற மாநிலத்திற்கும் கொடுக்க வேண்டும். இதற்கு என் இரத்த சம்மந்தமான உறவினர்கள் மறுத்தால் அவர்களிடம் தெளிவுபடுத்தி என்னுடைய வாக்குமூலத்த நிறைவேற்ற வேணும்'' என்று எழுதி இருந்தது.

அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருடைய உடலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டது. அவருடைய ஒரு கண்ணை கர்நாடகவிற்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.


யார் அந்த வாசுதேவன்?

சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே புள்ள சினிமாநகரை அடுத்த சின்னேரி வயல்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவருடைய மூத்த மகன் வாசுதேவன். சிறு வயதிலேயே தன் தாயை இழந்து விட்டார். தன் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வெள்ளி பட்டறைக்கு வேலைக்கு சென்றார். சம்பாதிக்கும் ஒரு பகுதி தொகையை ஏழை எளிய மக்களுக்காக கொடுத்து வந்ததோடு இரக்கம் நிறைந்தவராக திகழ்ந்தார்.

55 வயதான இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னணி நிர்வாகியாகவும், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பகுதி செயலாளராகவும் இருந்து மக்கள் பணியாற்றினார். எந்த கைமாறும் எதிர்பார்க்காமல் முதியோர் ஓய்வூதியம் பெற்று தருவது, வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு முதியவர்களை அழைத்து சென்று ரேசன் கார்ட் வாங்கி தருவதும். அந்த பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளுவது என மக்கள் பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று மாலை 4:00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


இதுப்பற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரவீன், ''நேற்று மதியம் எங்க அலுவலகத்திற்கு வாசுதேவன் வந்திருந்தார். அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து இருக்கிறது. இதனால் மக்களுக்கு நோய்வாய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேட்டை எதிர்த்து போராட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிந்தார். திடீரென நெஞ்சு வலிப்பதாக கதறினார். மடியில் படுக்க வைத்து உடனே ஆம்புலன்ஸூக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்து விட்டார். மிகச் சிறந்த தோழரை இழந்து விட்டோமே என்ற தாக்கம் இருந்துக் கொண்டே இருக்கிறது'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close