Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட பெண் குழந்தை - தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

திருப்பூர் காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தையை பராமரித்து பாதுகாப்பதற்காக அதிகாரிகள் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.

குழந்தை மீட்பு

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அதிகாலை, திருப்பூர் சின்னாண்டிபாளையம் காட்டுப் பகுதியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் ஒன்று தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. அச்சமயம் அவ்வழியில் சென்றவர்கள் உடனே சத்தம் எழும்பிய திசைநோக்கி சென்று பார்க்கையில், பிறந்து 1 மணி நேரம்கூட ஆகாத நிலையில் பச்சிளம் பெண் குழந்தையொன்று தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறது. செடிகளுக்கு நடுவே கிடந்த குழந்தையை மீட்ட அப்பகுதிவாசிகள், காவல்துறைக்கு தகவல் அளித்துவிட்டு, 108 மூலம் குழந்தையை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தார்கள்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்த்து பராமரிக்கப்பட்டு வந்த பெண் குழந்தை கடந்த சில நாள்களாக நல்ல உடல்நலத்துடன் தேறியது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பெண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த குழந்தையை பெற்றுக்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி முன்னிலையில், சேலம் பெத்தேல் விவசாய ஐக்கியம் என்ற தொண்டு நிறுவனத்திடம் குழந்தையை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஒப்படைத்தனர் அதிகாரிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close