Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முதல்வர் நாற்காலியை இறுக்கப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துள்ளார்' - தினகரன்

முதல்வரிடம் பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் நாற்காலியை இருக்கப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துள்ளார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். 

சென்னை செல்வதற்காக மதுரை வந்த டி.டி.வி.தினகரன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, ''நாங்கள் நடத்த உள்ளது ஆர்ப்பாட்டம் என்பதால் உச்ச நீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தாது. இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நாளை சென்னையில் நடைபெற இருந்த கூட்டத்தை வாபஸ் பெற்றுள்ளேன். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. தமிழக மாணவர்களின் கனவுகளையும் சமூக நீதியையும் மத்திய அரசு காத்திட வேண்டும். அதற்காக மத்திய அதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

டிடிவிதினகரன்

தமிழக  முதல்வரிடம் அருதிப்பெரும்பான்மை இல்லை. கவர்னர் மூலம் அதனை நிரூபிப்பேன். பெரும்பான்மை இல்லை என்பதை நிரூபிக்கவே கவர்னரை சந்தித்துக் கூறியுள்ளோம். அவர் நல்ல முடிவினை எடுப்பார் என்று நம்புகிறோம். எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ரிசார்ட்டில் இருப்பதற்கு காரணம் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை நிரூபிக்கவே. முதல்வரிடம் பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் நாற்காலியை இருக்கப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துள்ளார். அமைச்சர் உதயக்குமாருக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றார். 

மதுரைக்கு வரும் வழியில்  சொன்னதுபோல ஆர்.பி. உதயகுமாரின் தொகுதியான  திருமங்கலத்தில் கொட்டும் மழையிலும் பிரமாண்ட வரவேற்பை அளித்து தினகரனை மகிழ்ச்சியில் நனையவைத்தார்கள் ஆதரவாளர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement