Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் திருட்டு வழிப்பறி!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ளது அமராவதி புதூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி - இந்திரா தம்பதியினர். அவர்கள்  வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இருவரையும் கை மற்றும் வாயை கட்டிப்போட்டு, வீட்டில் உள்ள பீரோவை உடைத்து திருடர்கள்  பத்து பவுன் தங்க நகை மற்றும் 15,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல, காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமம் உள்ளது. கண்ணப்பன்(46) குடும்பத்தோடு திருமண விசேஷங்களுக்கு சென்று விட்டு வீட்டை வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு வீட்டிற்குள் போய் பார்த்த போது வெள்ளி பொருள்கள்  திருடப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை குன்றக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள். மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி ஊராட்சி செயலர் அஞ்சலா தேவி இடைக்காட்டூர் பாண்டியன் கிராம வங்கியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் எடுத்துவிட்டு வரும்போது பணம் காணாமல் போய்விட்டதாக மானாமதுரை  போலீஸில் புகார் செய்துள்ளார். இப்படி, சிவகங்கை மாவட்டத்தில் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close