Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவை 2 மாதத்துக்குள் துவங்க உத்தரவு!

karuur

கரூர் மாவட்டம் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், இரண்டு மாதத்திற்குள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவை துவங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக கரூரை சேர்ந்த சரணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  '1995-ம் ஆண்டு செம்டம்பர் மாதம் கரூர் மாவட்டம் உதயமானது. அப்போதிருந்து தற்சமயம் வரை 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கரூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. மாவட்டத்தில் பிற துறைகள் அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மட்டும் இல்லாதது பொது மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் வாங்குபவர்கள் குறித்து புகார் கொடுத்த வேண்டுமென்றால் 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தி்ருச்சி மாவட்டத்தில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தை அணுக வேண்டியுள்ளது. மேலும் புகார் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரும் திருச்சியில் இருந்து கரூர் வருவதற்கு காலதாமதமாகிறது. இதனால் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை காவல்துறையினர் பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவை துவங்க உத்திரவிட  வேண்டும்' என கேட்டிருந்தார் . இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள், 'இரண்டு மாதத்திற்குள் கரூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவை துவங்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆணையருக்கு உத்தரவிட்டுகிறோம்' என்று கூறி  வழக்கை முடித்து வைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close