Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நகைக்காக பெண் கொலை..! திருவல்லிக்கேணியில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று, நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் கலா. அவருக்கு வயது 52. திருவல்லிக்கேணி பழனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த அவர், வட்டித் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கலாவைக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்து 30 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காகப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close