Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் ரயில் நிலையங்களின் அருகே பராமரிப்புப் பணி நடைபெறுவதால் மின்சார ரயில்களின் சேவையில் இன்றும் நாளையும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்சார ரயில்

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை செல்லக்கூடிய அத்தனை மின்சார ரயில்களின் சேவை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 4.32, 5.20, 5.38, 6.07, 6.40, இரவு 7.32, 7.56, 8.52, 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்,

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.13 மணிக்கு புறப்படும் திருமால்பூர் விரைவு ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* குருவாயூரில் இருந்து நேற்று புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, அரக்கோணம், சென்னை கடற்கரை வழியாக இன்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

* செங்கல்பட்டில் இருந்து இன்று மாலை 6.40, இரவு 7.00, 7.25, 7.45, 8.10, 8.45, 9.10, 10.15, 11.10 மணிக்கும், திருமால்பூரில் இருந்து மாலை 5.10 மணிக்கும், காஞ்சீபுரத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரயில் செங்கல்பட்டில் இருந்து இன்று இரவு 7.05, 8.10, 9.10, 10.15, 11.10 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். அதேபோல் மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 7.40, 8.45, 9.50, 11.00, 11.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும்.

* தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* புதுச்சேரியில் இருந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரயில், புதுச்சேரியிலிருந்து செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்.

* சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.55, 4.40, 5.00, 5.20, 5.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரயில் செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். மறுமார்க்கமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து அதிகாலை 4.30, 5.06, 5.30, காலை 6.00, 6.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close